வியாழன், 4 ஜூன், 2015

தலித்துகளுக்கு குருவிக் கூடு! காஷ்மீர் பார்ப்பானுக்கு சொகுசு வீடு!

 இந்தியவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனையில் காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட் பார்ப்பனர்களை மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் அங்கே குடியமர்த்துகிற முயற்சியில் இறங்கியுள்ளது. ஜம்மு பகுதியில் அவர்களுக்கு இரண்டு அறைகள் கொண்ட வீடுகளைக் கட்டிக்கொடுத்தது அரசு. ஆனால் அதில் வசதிகள் இல்லையென்று பார்ப்பனர்கள் கூறிவிட்டார்கள். எனவே அவர்களை திருப்திப்படுத்துவதற்காக 1000 புதிய வீடுகளைக்கட்ட முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. அவற்றிற்காக 400 கோடி ரூபாயை செலவிடப்போவதாக அறிவித்தும் இருக்கிறது. அதாவது ஒரு வீடு 40 இலட்ச ரூபாயில் கட்டப்படவுள்ளது.
தமிழகத்தில் மட்டும் எடுத்துக்கொண்டால் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கட்டப்படும் தொகுப்பு வீட்டுக்கானத் தொகை ரூ.1 இலட்சம் (தானே புயல்நிவாரண வீடு), ரூ.1.20 இலட்சம், ரூ.2.30 இலட்சம் (பசுமை வீடு) ஆகிய முறையில் அளிக்கப்படுகிறது. இவையும் அதிகாரிகள், உள்ளூர் ஊராட்சி மன்றத்தினர் உள்ளிட்டவர்களால் கமிஷன் என்னும் பெயரில் சூறையாடப்பட்டு குறைவாகவே வந்து சேர்கிறது. குடிசையைவிட சிறிதான அளவுள்ள இவ்வீட்டுக்கு ஆயுளும் குறைவு. பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் பல இடங்ககளில் விழுந்து கொண்டிருக்கிறது. தலித்துகளுக்கு எந்த ஜாதி வெறியர்கள் வந்து நெருப்பு வைப்பாரோ என்ற அச்சம் குடிசையில் படுக்கும் போது இருந்தது. இத்தொகுப்பு வீட்டில் படுத்தால் எப்போ தலையில் விழுந்து கொல்லுமோ என்ற அச்சமே வருகிறது. ஆனால், ஆட்சியாளர்கள் இதுகுறித்தெல்லாம் எந்த அறிவுமில்லாமல் அல்லது திட்டமிட்ட அலட்சியப்போக்கால் குறைவானத் தொகையில் தரமற்ற வீடுகளையே கட்டித்தருகின்றனர்.
ஆனால், காஷ்மீர் பார்ப்பனர்களுக்கு ஒரு வீடு நாற்பது லட்சரூபாய் செலவில் கட்டபட உள்ளது. ஆயிரம் வீட்டுக்கு நானூறு கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இத்தொகையில்,தமிழகத்தில் வீடு கட்டப்படும் திட்டத்தின்படி  40 ஆயிரம் ஒரு இலட்ச ரூபாய் வீடுகள் அல்லது
33 ஆயிரத்து முன்னூற்றி முப்பத்து மூன்று 1.20 இலட்ச ரூபாய் வீடுகள் அல்லது 17 ஆயிரத்து முன்னூற்றி தொன்னூற்றி ஓர், 2.30 இலட்ச ரூபாய் வீடுகளைக் கட்டலாம். எவ்வளவு இடைவெளி அரசுத்திட்டத்தில். இவ்விடைவெளியில்தான் ஜாதியும் இந்து அரசியலும் உறுதியாக இருக்கிறது. எந்தவிதத்தில் பார்ப்பனர்களுக்கான வீட்டின் மதிப்பும் தலித்துகளுக்கான வீட்டின் மதிப்பும் அளவிடப்படுகிறது. காஷ்மீர் பார்பானுக்கு பாதுகாப்பில்லை அதனால் பாதுகாப்பான வீடு வேண்டும், அதனால் அதிகம் செலவிடவேண்டியதிருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்கமுடியாது. இங்கே யாருக்குத்தான் பாதுகாப்பிருக்கிறது. அதிலும் தலித்துகளுக்குத்தான் முற்றிலும் பாதுகாப்பில்லை. தலித்துகள் மீதான தாக்குதலும் வன்கொடுமையும் இதற்கு சாட்சியாகத் தொடர்கின்றன. எனவே, இந்த நாட்டில் அதிகம் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டியவர்களே தலித்துகள்தான்.  
பார்ப்பனர்களுக்கு நாற்பது இலட்ச ரூபாய் வீடென்றால் தலித்துகளுக்கு ஐம்பது இலட்ச ரூபாயில் வீடு கட்டித்தர வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனர்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சாதாரண தொகுப்பு வீட்டைத்தான் கட்டித்தரவேண்டும். இருவேறு வீடாக அமைக்கப்பட்டால் இருவேறு நாடே உருவாகும்!   

முகநூலுக்காக. 1-1-2015. இரவு 8.45

-ஸ்டாலின் தி

கருத்துகள் இல்லை: