வியாழன், 4 ஜூன், 2015

ஆதிதிராவிடர்/பழங்குடிகள் பள்ளிகள்.

ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பள்ளிகளுக்கு அரசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.தனி கல்வி அமைச்சர் நியமிக்கப்படவேண்டும்.



தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,430 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் 8,898 பேர்  +2 தேர்வு எழுதினார்கள். அவர்களில் 7,320 பேர் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். அதாவது 82 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் கூடுதலாக அரசு ஆதிதிராவிட/பழங்குடிகள் பள்ளிகள் மீது கவனம் செலுத்தவேண்டும். ஆதிதிராவிடர்/பழங்குடி பள்ளிக்கல்விக்காக தனிக் கல்வி அமைச்சரை நியமிக்கவேண்டும். அனைத்து ஆதிதிராவிட/பழங்குடிப் பள்ளிகளிலும் விடுதிகளை ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதியை தரவேண்டும். அனைத்து ஆதிதிராவிட/பழங்குடிப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வியைக் கொண்டுவரவேண்டும். இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளையும் கற்பிக்கவேண்டும். மாணவர்களுக்கு கூடுதல் ஸ்காலர்சிப் வழங்கவேண்டும்.ஆதிதிராவிட/பழங்குடி பள்ளிகளின் ஆசிரியர்கள்,பணியாளர்களுக்கு பள்ளிக்கருகிலேயே அரசுக் குடியிருப்புகளை அமைக்க வேண்டும்.

-ஸ்டாலின் தி

கருத்துகள் இல்லை: