வியாழன், 4 ஜூன், 2015

ஆண்டு-வருடம்-ஆடு-வரலாறு.


வள்ளுவர், கணியர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பறையர்கள் நட்சத்திரங்களை வைத்து ஆண்டுக் கணக்கை உருவாக்கினார்கள்.
குறிப்பாக , ஆடு வடிவத்தைக்கொடுத்த நட்சத்திரக் கூட்டத்தை வைத்து ஆண்டைக் கணக்கிட்டனர்.

ஆடு வடிவ நட்சத்திரக்கூட்டத்தை மேசம் என்றனர். மே என்னும் ஆட்டின் ஒலியை வேராகக் கொண்டு வந்த சொல்லாகும். அக்காலத்தில் ஆட்டை 'யாடு' என்றே சொன்னார்கள். யாடு என்பது பிறகு 'யாண்டு'  என்றாகி அதுவும் மருவி 'ஆண்டு' என்று ஆனது. அதாவது 'யாடு' என்பது 'ஆடு' ஆனக் காலத்தில் யாண்டு ஆண்டு ஆகியிருக்கலாம். ஆண்டு என்னும் சொல் 'ஆண்' என சுருங்கி ஆங்கிலத்தில் 'Annum'  ஆனது.

'வருடை' என்பதும் ஆட்டைத்தான் குறிக்கும். அதனாலேயே ஆண்டு என்பதற்கு வருடம் என்ற சொல்லும் வழங்கப்பட்டது. அதே சமயம் வடமொழியில் 'வருஷம்' என்பதுவும் ஆண்டைத்தான் குறிக்கும். ஆனால் வடமொழி 'வருஷம்' (varsha) என்னும் சொல்லுக்கு  மழை என்ற அர்த்தமும் உண்டு. ஒரு மழைக்காலத்திலிருந்து அடுத்த மழைக் காலத்துக்கிடைப்பட்ட காலத்தை ஒரு ஆண்டாக கருதியதால் வருஷம் என்று வந்திருக்கலாம் என்ற பார்வையும் உள்ளது. இது இன்னும் ஆராயப்படவேண்டியது. ஆனாலும் பறையர்கள் பிரபஞ்சத்தை நோக்கியவர்கள் என்பதற்கான சான்றாக ஆடு-ஆண்டு-வருடம் அமைகிறது.
(சான்று-குணாவின் வள்ளுவத்தின் வீழ்ச்சி)

-ஸ்டாலின் தி

கருத்துகள் இல்லை: