வியாழன், 4 ஜூன், 2015

அரசமரம்

புத்தர் தங்கி ஞானம் பெற்ற போதி மரமே அரசமரம். பௌத்த அரசுகள் பாதுகாத்த மரமாக இருந்ததால் அது அரசமரம்(அரசு மருத்துவமனை என்பது போல்...) என்றாகியிருக்கவேண்டும். அசோகர் மரம் நட்டார் என்ற சொல்லாடல் அரச மரத்தை வளர்த்தார் என்பதைத்தான் குறிக்க வேண்டும். சாலை ஓரங்களில் மரம் நட்டார் என்பது சரியாகப் படவில்லை. ஏனெனில் சாலைகள் காடுகளைத் திருத்தித்தான் போடப்பட்டன.அப்படி இருக்க தனியே மரம் நடவேண்டிய அவசியம் இல்லை. எனவே அசோகர் நட்ட மரம் புத்தன் ஞானம் பெற்று போதித்த பிரச்சனைகளுக்கு அறிவுரையும் தீர்வும் சொன்னார்கள்.பௌத்த வீழ்ச்சிக்குப்பிறகு போதியின் நிழலில் சாதி இந்துக்கள் உட்கார்ந்து நாட்டாமை செய்ய ஆரம்பித்திருக்கவேண்டும். இன்றைய மரத்தடி சாதிப் பஞ்சாய்த்தின் துவக்கம் பௌத்தத்தின் வீழ்ச்சிதான் என்பதற்கு போதி எனும் அரச மரங்களே சாட்சி!


-ஸ்டாலின் தி

கருத்துகள் இல்லை: